பக்கம்:இலக்கண வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

16

இடைய ராயிற்,
கோற்கையும் கொடுமடி யுடையும்
விளித்த வீளையும் வெண்பல்லு மாகித்
தோன்றலும்”

என்பதும்,

“அடக்கம் என்பது...
பணிந்த மொழியும் தணிந்த நடையும்
தானை மடக்கலும் வாய் புதைத்தலும் முதலாயின”
“வரைதல் என்பது,
காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும்
ஒழுக்கம்"

என்பதும் ஆகிய இவற்றைப் பார்த்த அளவான் எதுகை மோனைத் தொடை நலம் கெழும நடைபயிலுதல் தெளிவாம்.

ஈ. நச்சினார்க்கினியம்

தனிப்பெருஞ்சிறப்பு

தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! பிறப்பெல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே.

உரை கண்ட நூல்கள்

“பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் — சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சினார்க்கினிய மே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/161&oldid=1471520" இலிருந்து மீள்விக்கப்பட்டது