பக்கம்:இலக்கண வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


முடிபு” (அகத். 28), “வேதத்தையே” (அகத். 31), “வேத விதி” (புறத். 2), “வேத முடிபு” (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக் கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவர்க்கும் களவுக்கும் உள்ள வேறுபாட்டை, “கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்” என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தர் நச்சினார்க்கினியர் (கள. 1). என்பதை மறக்க முடியாது.

அறிந்தே செய்யும் பிழை

காலம் உலகம் என்னும் சொற்களை 'வடசொற்களாகச் சேனாவரையர் கூற, “காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின்”" (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் “அகர இகரம் ஐகார மாகும்”, “அகர உகரம் ஒளகார மாகும்” என்னும் நூற்பாக்களின் உரைகளில் "அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க, "அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க" என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறு கொளல் தெளிவாகின்றது. மேலும், “ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று” என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமையால் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து — சூத்திரங்களை நலிந்து பொருள் கூறும் வழக்கினை இவர் மேற் கொண்டவர் என்பதை இவரும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பது விளங்குகின்றது.

“அளபிறத் துயிர்த்த லும்” என வரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/166&oldid=1471525" இலிருந்து மீள்விக்கப்பட்டது