பக்கம்:இலக்கண வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

124.

விக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று” என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுதுகின்றார் நச்சினார்க்கினார் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்!

இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை நடுவுள்ளங் கொண்டு நாடுவாரையும், “இது போன்ற உரைகளை யெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணை காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப்பதுதான் வியப்பாகும்” என்றும் “நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாத வராயினும் வேத வைதிகப் பற்று மிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் ‘வேதம் வேதம்’ என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்” என்றும், “அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்த மட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன் ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக் கொள்ளலாம். பாட்டின் சொல்லமைப்பை அவர் எப்படிச் சிதைத் தாலும் பண்டிதர் பரம்பரை வழி வழியாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத் தக்கது” என்றும் வருவன (நச்சினார்க்கினியர் பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய தேர்ச்சி யுரைகளாம். “உள்ளது சிதைப் போர், உளரெனப் படாஅர்” என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/169&oldid=1471528" இலிருந்து மீள்விக்கப்பட்டது