பக்கம்:இலக்கண வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

நேமிநாதம்

“தொல்காப்பியத்திற்குப் பின்னர், எழுத்து சொல் இலக்கணச் சுருக்கப் பயிற்சிக்கு இந்நூலே கருவியாக விளங்கியது” (பக். 263).

தண்டியலங்காரம்

“அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரமாகும்”. (பக். 259).

நன்னூல்

“நூல் என்றாலே இலக்கண நூலையே குறித்தல் பழ வழக்கு. நன்னூல் 'நல்ல இலக்கணம்' என்னும் பொருளது” (பக். 278).

“இளம்பூரணர் உரைவழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார்” (பக். 76).

அகப்பொருள் விளக்கம்

“தொல்காப்பியம் அகப்பொருளைக் கூற்றுவகையால் கூறும். இந்நூல் துறை வகையால் கூறுகின்றது” (பக். 315):

இலக்கண விளக்கம்

“முற்பட்ட நூல்கள் ஓரிலக்கணமும் ஈரிலக்கணமும் உடையனவாக இருந்தன. ஐந்திலக்கணமுடைய வீரசோழியம் தமிழ் நெறிக்கு மாறுபட்டுச் சென்றது. பிரயோக விவேகம் இன்னும் அப்பாற்சென்றது. உரைகளும் முரணியும் மயக்கியும் அமைந்தன. இவற்றை எல்லாம் எண்ணிய பட்டறிவாலும் பாடஞ்சொன்ன முறையாலும் முற்றிலும் புதுநூல் செய்யாமல் முற்றிலும் பழமையையே கொள்ளாமல் ஓராற்றான் ஐந்திலக்கணமும் ஒருங்கு கற்கும் ஒரு நூலைப் படைத்தார்” (பக். 369).

“ஆசிரியர் கற்பிக்கும் நோக்கில் பன்னூற் பொருளும் இந்நூல் தொகுப்பில் காணுமாறு செய்தற்குப் பேருதவியாக இருந்திருக்கும்” (பக். 371).

தொன்னூல் விளக்கம்

நன்னூல் எனப் பெயர் கொண்ட அது, அதற்கு முன் வந்த நேமிநாதத்தைச் சின்னூல் என்று வழங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/17&oldid=1480813" இலிருந்து மீள்விக்கப்பட்டது