பக்கம்:இலக்கண வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்

ஆறாம் வேற்றுமை பற்றிய நூற்பாவில் வரும் (சொல். 8I) நிலை என்பதற்குப் பிறரெல்லாம் சாத்தனது நிலை என்றும் அவரவரது நிலைமை என்றும் கூறினாராகவும், பெரிதும் முன்னையோர் உரையைத் தழுவியே உரை வரையும் இவர் இவ்விடத்தில், “நிலை—பெண்ணாகத்துப் பெருஞ்சங்கரனாரது நிலை. இஃது ஒன்றிய தற்கிழமை” என்று கூறுவது சிவநெறிச் சார்பினர் என்று கொள்ளக் கிடக்கிறது.

சால்பு

இவர் இரண்டு வகையாக இலக்கணம் கூறி, “இரண்டனுள் நல்லது தெரித்துரைக்க” என்பதும் (210), ஒரு காரணத்தைக் கூறி, “பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்” என்பதும் (222) ஐயமுற்ற இடங்களில் ‘வாராது போலும்’ எனப்போலும் வாய்பாட்டால் கூறுவதும் இவர்தம் சால்பினைச் சாற்றுவன.

விருத்தியுரை

எடுத்த பொருளை நன்கு விளக்கிக் கூறுதலில் இவர் பெரிதும் கருத்துச் செலுத்துகிறார். அதனால் இவ் வுரையை விருத்தியுரை எனக் கொண்டமை வெளிப்படு கின்றது.

“ஓசை எனினும், அரவம் எனினும், இசை எனினும், ஒலி எனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் ஓசைக்கும் பொது. கிளவி எனினும் மாற்றம் எனினும் மொழி எனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும்” என்றும் (1)

“சேரி என்பது பலகுடியும் சேர்ந்திருப்பது. தோட்டம். என்பது பலபொருளும் தொக்கு நின்ற இடம்” என்றும் (49) கூறுகிறார். முன்னதில் ஒருபொருட் பன்மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/177&oldid=1471542" இலிருந்து மீள்விக்கப்பட்டது