பக்கம்:இலக்கண வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

133

களைத் தொகுத்துரைப்பதும், பின்னதில் தோடு (தொகுதி) என்னும் வேர்ப்பொருள் உணர்ந்து கூறுவதும் அவர் தம் பொருள் விளக்கச் சிறப்பைப் புலப்படுத்தும். “எல்லாச் சொல்லும்” என்பதற்குத் தமிழ் இலக்கணம் கூறும் நூலாகலின் தமிழ்ச் சொல்லே சுட்டப்படுவது எனத் தெரியப் பெறுமாயினும் நன்கு விளங்குமாறு ‘தமிழ்ச்சொல் எல்லாம்’ என்று இவர் உரைப்பது (158) குறிப்பிடத்தக்கது.

உரைநயம்

முயற்கோடு ஆமை மயிர்க் கம்பலம் என்பவை இன்மைப் பொருள். இவற்றுடன் “அம்மிப்பித்தும் துன்னூசிக்குடரும்” என இவர் இயைத்துக் கொள்வது(34) சுவை மிக்கது. ‘ஏமாளி கோமாளி’ என்பவை இன்னும் வழக்கில் உள்ளவை. இவர் ‘ஏமாள் கோமாள்’ என்கிறார் (148). கன்று என்பது ‘பூங்கன்று’ என வருதலைச் சுட்டுகிறார் (35). |

“கலம்-சாத்தனது கலம்; கலம் என்பதனை ஒற்றிக் கலத்தின் மேற் கொள்க. பிற கலத்தின் மேற் கொள்ளாமைக் காரணம் என்னை எனின் இஃதொரு பொருள் இருவர்க்குடைமையாக நிற்கும் வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல்” என்று இவர் தரும் விளக்கம் புதுவது.

“காடன், நாடன்” என்பவற்றுக்குக் “காடி, நாடி” எனப் பெண்பால் கூறுவதும் (177) “உழுது கிழுது” (235) என்பதும் புதுமைய. நன்னூலார் ‘இடைப்பிறவரல்’ என்பதை இவர் ‘இடைக் கிடப்பு’ என்பதும் அது.

வினையெச்ச வாய்பாடுகளின் வைப்பு முறையைக் கூறும் இவர் “செய்து என்பது முதலாகச் செய்தென என்பது ஈறாக அந்நான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள், செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/178&oldid=1471543" இலிருந்து மீள்விக்கப்பட்டது