பக்கம்:இலக்கண வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii


தூண்டிற்று. பின்னூலாக வந்த வீரமாமுனிவரின் இலக்கண நூலைத் தொன்னூல் என்று பெயரிடத் தூண்டிற்று" (பக். 386).

அறுவகை இலக்கணம்

மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக வளர்ந்த செய்தி அறிந்ததே. இவண், ஆறாம் இலக்கணமெனப் புலமை இலக்கணம் ஒன்றனையும் சேர்த்து அறுவகை இலக்கண நூல் எழுந்தமை காணலாம் (பக்.423).

உரைத்திறன் அறிவித்தல்

உரையாசிரியர்களிடம் பல வகையான திறன்கள் நிரம்பியுள்ளன. பழந்தமிழ் நூல்களின் அமைப்பு, உட்பிரிப்பு, நூற்பா எண்ணிக்கை, சரியான மூலபாடம் ஆகியவற்றை ஆராய்ந்து கூறிப் பொருத்தமில்லாதவற்றை அகற்றுதல், முன்னைய உரைகளில் உள்ள பொருந்தாத கருத்துகளை மறுத்தல், நூலாசிரியரின் இலக்கணக் கொள்கைகளைத் திட்டவட்டமாக அறிந்து வெளிப்படுத்துதல், பொருத்தமான எடுத்துக்காட்டுகள் தருதல், சொற்பொருள் கூறல், தம் காலத்து மொழி வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுதல் ஒப்புமைப் பகுதி தருதல் ஆகியவை உரையாசிரியர்களின் திறன்களாக மதிக்கப்படுகின்றன.

இத்திறன்கள் யாவற்றையும் அறிந்து இந்த நூலின் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். அவை கீழே தரப்படுகின்றன.

இளம்பூரணர்

தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரை கொண்ட நலந்தாலேயே (பக். 67).

சேனாவரையர்

ஆசிரியர் (தொல்காப்பியர் தூற்பா) தொகுக்கும் நயத்தைத் தக்காங்கு எடுத்துரைத்தலில் தனித்திறம் காட்டுகிறார் சேனாவரையர் (பக். 91).

நூலாசிரியர்க்குரிய நெறிகளுள் ஒன்று உய்த்துணர வைத்தல் என்பது. அத்தகைய இடங்கள் சிலவற்றில் சேனாவரையர் நயம்பட உரை வரைகின்றார் (பக். 93).

இ.வ. B

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/18&oldid=1480814" இலிருந்து மீள்விக்கப்பட்டது