பக்கம்:இலக்கண வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

135

பெயர்

‘தெய்வச் சிலையான்’, ‘தெய்வச் சிலைப் பெருமான்’ என்பன கல்வெட்டுகளில் வரும் பெயர்கள். “அரையன் தெய்வச் சிலையான் எடுத்த கையழகியான்”, “இளையாழ்வார் தெய்வச் சிலைப் பெருமாள் ஆன விக்கிரம பாண்டிய காலிங்கராயர்” என்பன அவை. அவற்றால் ‘தெய்வச் சிலையார்’ எனப்படும் பெயருடையார் பிறரும் இருந்தமை புலப்படும். கல்வெட்டுக் கூறும் தெய்வச் சிலையார் என்னும் பெயருடையாருள் முன்னவர், பாண்டி மண்டலத்துக் காகூர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்பு நல்லூரினர். பின்னைக் கல்வெட்டு நெல்லை மாவட்டத்து மன்னார் கோயிலில் உள்ளது. ஆதலால் இப் பெயருடைய இவ்வுரையாசிரியரும் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ள இடமுள்ளது.

காலம்

இவர் இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் ஆகியவர்களைப் பெயர் சுட்டாமல் மறுத்தெழுதிச் செல்கிறார். நச்சினார்க்கினியர் சேனாவரையர் ஆகியோர்க்கு இவர் முற்பட்டவர் எனின் இவர் பெயரை அவர்கள் சுட்டியிருப்பர். அதனால், அவர்களுக்கு இவர் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. மேலும் “பெண்மைபடுத்த மகனென் கிளவி” (சொல். 160) என்பதற்கு பெண்மகன் என்று மாறோகத்தார் இக்காலத்தும் கூறுப என்று நிகழ்காலத்தால் சேனாவரையரும் கல்லாடனாரும் கூறினர். ஆனால் இவரோ “விளையாடும் பருவத்துப் பெண்டிகளைப் பெண்மகன் என்றால் பண்டையோர் வழக்கு” என இறந்த காலத்து நிகழ்வாகக் கூறினார். அதனாலும் சேனாவரையர்க்கும் கல்லாடனார்க்கும் பின்னவர் என்பது விளங்கும். இவற்றாலும் முற்காட்டப்பட்ட கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியும் பதினான்காம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/180&oldid=1471546" இலிருந்து மீள்விக்கப்பட்டது