பக்கம்:இலக்கண வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

லதிகாரம் போலப் பெரும்பயன்படாமை கருதி எழுத்திற்குரை செய்யாது ஒழிந்தமையின், தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியரை யுள்ளிட்டோருரையை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்னுள்ளோரும் மயங்கு வாராயினார்” என்று பாராட்டுவார் (முதற் சூத்திர விருத்தி).

சேனாவரையர் தென்மொழி வடமொழிப் புலமையாளர். அவ்வாறே முனிவரும் இருமொழிப் புலமையாளர். முனிவரோ “வடநூலுணர்ந்தார்க்கன்றித் தமிழியல்பு விளங்காது” என்னும் அழுத்த மிக்கவர். அத்தகையர், தமிழின் தனித் தன்மைகளையும் மறந்தாரும் அல்லர்.

“தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வட மொழியிற் பெறப்படாமையாலும்” என்கிறார்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியரை அகத்தியனாரோடு மாறுகொண்டார் என்று கூறுவதை, “அருந்தவக் கொள்கை அகத்தியனாரோடு மாறுகொண்டு நூல் செய்தாராயின் இவ்வாறு நிலைபெற்று வழங்காது” என ஆணையிட்டு மறுக்கின்றார்.

ஐந்திரம் நிறைந்த என்பதற்கு “அகத்தியம் நிறைந்தமை எல்லாரானும் தெரியப் பட்டமையின் வடமொழியினும் வல்லனாயினான் என்பது விளக்கிய அங்ஙனங் கூறினார்” என்கிறார்.

தொல்காப்பியம் என்னும் பெயரை ஆயும் முனிவர், தொல்காப்பிய முடையான் என்னும் பொருட்கண் ‘அம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/195&oldid=1471580" இலிருந்து மீள்விக்கப்பட்டது