பக்கம்:இலக்கண வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


முடிதல் வேண்டுமாயினும் இடையிடையுற்றுக் கிடைகொளச் செய்த பிணியினாலும் அணியணியாக வந்து தடை பல செய்த மிடியெனும் படையினாலும் இடையீடு நேர்ந்தமையின் இது பொழுது முடிந்தன பாயிரமும் நூன் மரபும் மொழிமரபும் என மூன்றே. பிறப்பியல் எழுதப்படுகின்றது” என்பதால் அறிக.

சிவஞான முனிவரின் கொள்கைகள் 32-ஐயும், நன்னூலார் கொள்கைகள் 15-ஐயும், பிறர் கொள்கைகள் 47-ஐயும் பாயிர விருத்தியுள் மறுத்துள்ளார்.

இவர்தம் உரை விளக்கம் இயலுமாற்றை அறிதற்கு ஒரு சான்று:

“இந்நூல் (தொல்காப்பியம்) இயல்பானே குற்றமின்மை உடைத்தாயினும் பெரியோர் கேட்டு நன்றென்னாவிடிற் பயன்படாமையின் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய ஆசானும், அவனும் ஒருவனாய்க் கூறிற் பயன்படாமையான் அவையும், அவையும் பாண்டியனை அன்றிக் கூடாமையிற் பாண்டியனும், பாண்டியனும் திருவின்றி யவையைப் பேணல் அமையாமையால் திருவும், அத்திருவும் ஈகையொடு கூடாவிடிற் பயனின்மையால் தருகையும், அத்தருகையும் ஆற்றலில் வழி மாற்றாரான் அழியுமாகலின் நிலந்தரும் ஆற்றலும், அவ்வனைத்தும் எய்தினும் நூலறிவின்றேற் பயன்படா ஆகலிற் பனுவலும், பனுவலுங் குற்றம் உளதாயிற் கொன்னப்படாமையாற் குற்றமின்மையும் ஒன்றற்கு ஒன்று தொடர்பாக முடிதவின் அம்முறையே ‘போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்’குக் காட்டியென்றார்”(184).

தவமுடையாரே நூல் செய்தற்குரியர் என்பதொரு கருத்தை மறுக்கும் சண்முகனார், “அவ்வாறு விதிப்பின் அகத்தே தவவொழுக்கம் முற்றினமையானே யூழ்வயப்படாது நின்று குற்றமிலவாக நூல் செய்த வள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/198&oldid=1471586" இலிருந்து மீள்விக்கப்பட்டது