154
முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் இன்மையான் அவர் போல்வார் செய்த நூலினும் குற்றம் உளவெனப் படுமாகலானும், அகத்தே தவவொழுக்கம் முற்றாமையான் ஊழ்வயப்பட்டுக் குற்றமுளவாக நூல் செய்த பவணந்தி முனிவர், சிவஞான முனிவர் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் உண்மையான் அவர் போல்வார் செய்த நூலெல்லாம் குற்றமிலவெனப்படுமாகலானும் அவ்விதி பயினின்றாக முடிதலின் அவர் செய்த நூலாயினும் அறிவுடையார் பலர் கேட்டுக் குற்றமின்மை ஆராய்தலே வேண்டப்பட்டது” என்கிறார். (191)
அரசஞ்சண்முகனார் தந்தையர் அரசப்பபிள்ளை என்பார். இவர் அழகர்சாமி தேசிகர், சிவப்பிரகாச அடிகள் ஆகியோரிடம் கற்றவர்; சேதுபதி உயர்பள்ளி, மதுரைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் பணிசெய்தவர். மறைமலையடிகளார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர், பண்டிதமணி, நாவலர் பாரதியார், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஆகியோரிடம் நட்புக் கொண்டவர். மாலைமாற்று மாலை, இன்னிசை இருநூறு, ஏகபாதநூற்றந்தாதி, திருக்குறள் சண்முக விருத்தி, நவமணிக்காரிகை நிகண்டு முதலிய நூல்கள் இயற்றியவர். இவர் காலம் 1868-1915.
இச்சண்முக விருத்திக்கு மறுப்பாகச் செப்பறைச் சிதம்பர சுவாமிகள், தொல்காப்பியச் சண்முக விருத்தி மறுப்பு என்றொரு நூல் எழுதினார். அது, மறுப்பின் மேல் எழுந்த மறுப்பு நூலாகும்.
ஒ. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பொருட்படலப் புத்துரை
1950இல் கோவையில் முத்தமிழ் மாநாடு நடந்தது. நாவலர் பாரதியார் மாநாட்டுத் திறப்புரை நிகழ்த்தினார். அவ்வுரையின் இடையே, “தமிழர்கள் தொல்காப்பியத்தைப் படிக்கும்பொழுது தொல்காப்பியக் கண்கொண்டு