பக்கம்:இலக்கண வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

பெற்றுச் செல்வமும் புகழும் சேர வாழ்ந்தார். இவர் காலம் 1879-1959.

ஓ. புலவர் குழந்தையுரை

தொல்காப்பியம்—பொருளதிகாரம்—குழந்தையுரை 1968-இல் வெளிவந்தது. அது, அகத்திணையியல், பொதுவியல், களவியல், கற்பியல் மெய்ப்பாட்டியல் புறத்திணையியல் என்னும் ஆறு பகுதிகளைக் கொண்ட முதற்பாகமாகும்.

இப்புத்துரையின் தோற்றம், வைப்புமுறை, பகுப்பு ஆகியன பற்றி முகவுரையில் உரையாசிரியர் குறித்துள்ளார்:

“(இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகள்) இக்காலத் தமிழ்மக்கள் யாவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அத்தகு நிலையில் உள்ளமையால், இக்காலத்திற்கேற்ற முறையில் தொல்காப்பியத்திற்கு ஓர் உரை தேவை என்பது தமிழ்மக்கள் விரும்புவதொன்றாகும். தமிழ்மக்களின் அவ்விருப்பத்திற்கேற்ப அத்தகுமுறையில் எழுநூறு ஆண்டுகட்குப் பின்னர் எழுந்ததேயாகும், குழந்தையுரை என்னும் இவ்வுரை.”

வைப்புமுறை

தொல்காப்பியச் சூத்திரங்களின் வைப்புமுறை இக்காலத்தினர் எளிதில் இயைபு படுத்திக் கற்றறிய முடியாத அத்தகு நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்றும் கனவின் வகை கூறும் சூத்திரம் செய்யுளியலின் 186-வது சூத்திரமாக உள்ளது. இது களவியலின் முதலில் இருக்கவேண்டும். அப்போது தான் அவ்வகைகள் பற்றிய இலக்கணங்களைக் கற்றுணர்தற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/202&oldid=1471609" இலிருந்து மீள்விக்கப்பட்டது