பக்கம்:இலக்கண வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


பற்றிய ஆய்வும், அதற்கு முந்து நூல் ஆய்வும் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் க. வெள்ளைவாரணனார் ‘தொல்காப்பியம்’ என்னும் அரிய ஆய்வு நூல் இயற்றினார். தொல்காப்பிய ஆய்வுடன், அதன் உரைநடையாக்கமாகவும் அந்நூல் விளங்குகின்றது. அவரே தொல்காப்பியம் — நன்னூல் இரண்டையும் ஒப்பிட்டு ஒப்பீட்டு நூலும் செய்தார். பொருளதிகார உரைவளப் பதிப்பும் மேற் கொண்டு நிறைவுறுத்தி வருகின்றார். இவ்வுரை வளத்தின் அகத்திணை இயலை அருமையாகச் செய்தவர் மு. அருணாசலம் பின்ளை ஆவர்.

ஆ. சிவலிங்களார் தொல்காப்பிய ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதி வருகின்றார். அவர் எழுதியுள்ள ‘இளம்பூரணர் எழுத்துரை’ (விளக்கமும் குறிப்பும்) என்னும் நூலும், ‘தொல்காப்பிய உரைவளத் தொகுப்பு’ நூல்களும் குறிப்பிடத்தக்கவை. சி. கணேசையர் எழுதிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் பயன்மிக்கவை. ‘தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்னும் பின்னங்குடி சுப்பிரமணிய சாத்திரியாரின் நூல் விரிவு மிக்கது (1930); பல்வேறு மேலாய்வுக்குரியது.

சி. இலக்குவனார் தம் அறிவர் பட்ட ஆய்வுக்குத் தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு அதனை ஆங்கிலத்தில் பெயர்த்து உலகறியச் செய்தார். அதற்கு முன்னுரையாக எழுதிய ஆய்வுப் பகுதி தொல்காப்பியந் தழுவிய முழு ஆய்வாகப் பெருகி விளங்குகிறது. அது ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் பெயரில் தனி நூலாகவும் வெளி வந்துள்ளது.

சாமி. சிதம்பரனார் ‘தொல்காப்பியத் தமிழர்’ என்னும் நூலை இயற்றினார். அது பொருளியல் பற்றிய தமிழர் வாழ்வியல் விளக்கமேயாகும். புலவர் குழந்தை இயற்றிய ‘தொல்காப்பியர் காலத் தமிழர் ’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/208&oldid=1472491" இலிருந்து மீள்விக்கப்பட்டது