பக்கம்:இலக்கண வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

என்னும் நூலும் தொல்காப்பியப் பொருளதிகார விளக்கமேயாம்.

மு. வை. அரவிந்தன் இயற்றிய ‘உரையாசிரியர்கள்’, இரா. மோகன், நெல்லை த. சொக்கலிங்கம் ஆகிய இருவரும் இணைந்தியற்றிய ‘உரை மரபுகள்’ இராம. தமிழண்ணல் இயற்றிய நூல் ஆகியவை தொல்காப்பியம், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பற்றிய திறனாய்வு நூல்களாக விளங்குகின்றன.

தமிழண்ணல் எழுதிய ‘இறைச்சி’, ‘உள்ளுறை’ முதலிய தனி நூல்கள் தொல்காப்பியக் குறிப்புகளைத் துலக்கிக் காட்டும் விளக்குகளெனத் திகழ்கின்றன.

வ. சுப. மாணிக்கனார் பல்காலும் பல நிலைகளில் எழுதிய தொல்காப்பியக் கட்டுரைகளின் தொகுப்பாகிய ‘தொல்காப்பியக் கடல்’, ‘தொல்காப்பியத் திறன்’ என்னும் நூல்கள் தொல்காப்பியத்தைப் பன்முகக் கண்ணாடி கொண்டு பளிச்சிடக் காட்டும் நுண்ணியல் நூல்களாகத் திகழ்கின்றன. அவர்தம் அறிஞர் ஆய்வுக்கு, வரைந்த ஆங்கில நூலின் தமிழாக்கமாகிய ‘தமிழ்க் காதல்’ பல்லபல மயக்கறுக்கும் நல்லியல் நூலாகும்.

க. ப. அறவாணரின் சைனரின் தமிழிலக்கண நன்கொடையும் தொல்காப்பிய நூலும் அரிய கருவி நூல்கள். அவ்வாறே ச. வே. சுப்பிரமணியனாரின் ‘இலக்கணத் தொகை—எழுத்து’ எனப்படும் தொகை நூலும் அரிய கருவி நூலே. ‘நச்சினார்க்கினியர்’ என்னும் பெயரில் சுருங்கிய ஆனால் நயமிக்க நூலை இயற்றிய மு. அண்ணாமலை சுட்டத்தக்க ஒருவர். அவ்வாறு தனித்தனி உரையாசிரியரைப் பற்றிய திறனாய்வு நூல்கள் விரிந்த அளவில் வெளிப்படல் நன்றாம். தொல்காப்பியப் பரப்பில் வெளிவந்த கட்டுரைகள் ஆய்வு நூல்கள் அனைத்தும் தொகுத்துக் காட்டிய அடைவன்று இது. ஓராற்றாற் சுட்டிக் காட்டியவையே. இவ்வளவில் கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/209&oldid=1472493" இலிருந்து மீள்விக்கப்பட்டது