பக்கம்:இலக்கண வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

நூல்களைப் பற்றியும் ஆய்வு விளக்கம் தருதல் வேண்டத்தக்கதே. பதிப்பு - வெளியீடுகள் பற்றிய வரலாறும் இடம்பெறத் தக்கதே. இவற்றையெல்லாம் இவ்வரலாற்றில் ஒருங்கு தருவதாயின் வரை கடந்து செல்லும் என்னும் கருத்தால் குறித்துக் காட்டும் அளவில் நிறுத்தினாம் என்க. தொல்காப்பியப் பதிப்புகள் எனவும், தொல்காப்பியத் திறனாய்வுகள் எனவும் தொல்காப்பியக் கட்டுரையாளர்கள் எனவும் தொல்காப்பிய ஆய்வடங்கல் எனவும் தொல்காப்பிய வழக்காறுகள், ஆட்சிகள் எனவும் பிறவாறும் தனித் தனி நூல்கள் வெளிப்படத்தக்கன என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/210&oldid=1465599" இலிருந்து மீள்விக்கப்பட்டது