பக்கம்:இலக்கண வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. இறையனார் அகப்பொருள்

இறையனாரால் இயற்றப் பெற்ற அகப் பொருள் இலக்கண நூல் இஃது என்பது பெயரை அறிந்த அளவானே புலப்படும். இதற்குக் களவியல் எனவும், இறையனார் களவியல் எனவும் பெயர்களும் வழங்கும்.

இறையனார்

நாற்கவிராச நம்பியால் இயற்றப்பட்ட அகப்பொருள் நூல் ‘நம்பியகப் பொருள்’ எனப்படுவதுபோல் இறையனார் என்னும் புலவர் ஒருவரால் இயற்றப் பெற்ற நூல் இஃது என்பது இயல்பான முறை. ஆனால் ‘இறையன்’ என்பதை ‘இறைவன்’ எனக் கொண்டு உரையும் வரலாறும் உரைத்து வருதல் நெடுநாள் வழக்காக உள்ளது.

“இந்நூல் செய்தார் யாரோ எனின், ‘மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர் சோதி அருமறைக்கடவுள் என்பது” எனவரும் இந்நூல் உரை இதனைக் கூறுதல் அறிக.

நூல்வகை இந்நூலைச் செய்தான் இறைவன் எனக் கொண்டமையால், இதனை வழிநூல் என்பதற்குத் தடையுண்டாயிற்று. அதனால், “இது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற் செய்யப்பட்டதாகலான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/211&oldid=1472494" இலிருந்து மீள்விக்கப்பட்டது