பக்கம்:இலக்கண வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175

போழ்து உண்பல் (உண்பேன்) என்று நின்றவிடத்து, அருளுடையான் ஒருவன் அதனைக் கண்டு, இவள் இதனை உண்டு சாவாமல் கொண்டுபோய் உகுப்பல் (கொட்டுவேன்) என்று, அவளைக் காணாமே கொண்டு போய் உகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக்கண் (ஆளிலா இடத்து) நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்களவினான் அவளை உய்யக்கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்கும் என்பது” என்கிறார். களவின்பங்காட்டிப் பேரின்பம் எய்துதலை உவமை நயம் பெறக் கூறுகிறார்.

உவமை

"கடுத் தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தீற்றியவாறு போலவும், கலங்கற் சின்னீர் தெருளாமையான் உண்பானை அறிவுடையான் ஒருவன் பேய்த் தேரைக் காட்டி உதுக்காணாய் நல்லதொரு நீர் தோன்றுகின்றது. அந்நீர் பருகாய், இச்சேற்று நீர் பருகி என் செய்தி என்று கொண்டுபோய் நன்னீர் காட்டி ஊட்டியது போலவும், தான் ஒழுகா நின்றதோர் இணைவிழைச்சி னுனள்ளே மிக்கதோர் ஒழுக்கங் காட்டினான்” என்கிறார்.

தடைவிடை

“இவர் தடை விடைகளால் நயமுற விளக்குதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இது தலைவன் தலைவியர் காட்சியும் அதனால் உணர்வும் பற்றியது.

ஏனாதி மோதிரம் செறிக்கும் அத்திரு அவன் செறிக்கின்றபொழுதே உண்டாயிற்றன்று; முற்கொண்டு அமைந்து கிடந்தது.

அரசு வீற்றிருந்த திருவுடையான் ஒருவன் அரசு வீற்றிருக்கும் அத்திரு அரசு வீற்றிருக்கின்றபொழுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/220&oldid=1472516" இலிருந்து மீள்விக்கப்பட்டது