பக்கம்:இலக்கண வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பெற்றோர்கள் உறைவிடத்தைத் தெய்வத்தானம் எனச் சிறப்பிக்கிறார் (21). ‘அரியன தாங்கல் அன்றே பெரியாரது பெற்றிமை’ என வியக்கிறார் (9). தன் நாட்டு வாழும் மக்கள் தன்னைக் கண்டு மகிழ்வதற்கென்றேயும் வேந்தன் செலவு மேற்கொள்ளுதலை நயக்கிறார் (35). இன்னாதது ஒன்று உண்மையான் இனியதன் இன்பம் அறியப்படும் என்பதைச் சுட்டுகிறார் (40). ஒரு கருமம் எடுத்துக்கொண்டு முடிப்பான் புக்கு முடியாது தவிர்வார் சிற்றறிவினார் எனச் சாடுகின்றார் (53). பிறர் குறிப்புப்படி அல்லது கட்டளைப்படி, தன் கருத்தின்றிச் செயலாற்றுதலை ‘இறப்பவும் இனிவந்ததோர் ஒழுக்கம்’ எனப் பழிக்கிறார் (35). மனத்தான் வரும் நோயெல்லாம் உணர்வின்மையான் வருவது எனத் தெளிவிக்கிறார் (31). கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் மகிழ்வை விளக்குகிறார் (3),

மதுரையில் ஆவணி அவிட்டமும், உறையூரில் பங்குனி உத்திரமும், சுருவூரில் உள்ளிவிழாவும் இரவெல்லாம் ஊர் உறங்காமல் கொண்டாடுவதை ‘ஊர் துஞ்சாமை’ என்பதற்கு எடுத்துக் காட்டுகிறார் (16). குறுங்கண்ணி, நெடுங்கோதை, விரவுத்தழை, சூட்டுக் கத்திகை, மோட்டுவலயம் என மாலை வகைகளையும் (3) அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி, செங்குன்று, இளமரக்கா, பூம்பந்தர், விளையாடிடம் என இடவகைகளையும் (115) தக்கவகையில் பயன்படுத்துகின்றார்.

திங்கள் என்பதைப் பிறைத்திங்கள் மதித்திங்கள் என இரண்டாகக் குறித்துப் பிறைத்திங்கள் முன்னொளியாய்ப் பின்னிருளாம்; மதித்திங்கள் பின்னொளியாய் முன்னிருளாம் என்று இவர் விளக்குவது தேர்ச்சிமிக்கது (32).

“பூப்புப் புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/223&oldid=1472519" இலிருந்து மீள்விக்கப்பட்டது