பக்கம்:இலக்கண வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

காணலாம். எஞ்சியவற்றையெல்லாம், ‘அறியவரும் தமிழ் இலக்கண நூல்கள்’ என்னும் பின்னிணைப்பில் காணலாம்.

அ. அவிநயம்

யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, வீரசோழியவுரை, பன்னிருபாட்டியலுரை, நன்னூல் மயிலைநாதருரை, தக்கயாகப் பரணியுரை ஆகியவற்றால் அறியப்படும் நூல் ‘அவிநயம்’ ஆகும். இந்நூலின் நூற்பாக்களாக அறிந்தவை தனி நூலுருப் பெற்றுள்ளன.

சங்க காலத்திற்குப் பிற்பட்டு 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டளவில் தோன்றி 10-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிப் பின்னர் மறைந்த நூல் அவிநயம் என்றும், சமணஞ் சார்ந்தவர் அவிநயனார் என்றும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார் (மறைந்து போன தமிழ் நூல்கள். 243).

அவிநயம் என்னும் சொல்லைத் தக்கயாகப் பரணியுரை, “நளினத்தையுடையது நளினி; அவிநயத்தால் உடைப்பெயர்ச்சொல் ஈறு திரிந்தது” எனக் குறிப்பிடுகிறது (காளிக்குக். 153).


இலக்கண வகை

எழுத்தொலி உண்டாகுமாற்றை மயிலைநாதர் குறிப்பிடுவதும் (நன். எழுத். 13), சொல்லாய்ந்த வகையை வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பிடுவதும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றில் யாப்பிலக்கண நூற்பாக்கள் மிகப்பலவாக மேற்கோள் காட்டப்படுவதும் அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை சுட்டப்படுவதும் பன்னிருபாட்டியலில் பாட்டியல் நூற்பாக்கள் பல வருவதும் நோக்க அவிநயனார் ஐந்திலக்கண நூலாகத் தம் நூலைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/227&oldid=1472523" இலிருந்து மீள்விக்கப்பட்டது