பக்கம்:இலக்கண வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

செய்தாரோ அன்றித் தொல்காப்பியனார் போல எழுத்து சொல் பொருள் இலக்கண நூலைச் செய்தாரோ என ஐயம் எழுகின்றது. அன்றித் தனித்தனி நூல் செய்திருத்தலும் கூடுவதே. நாலடி நாற்பது என்பதும் இவர் நூலாகளின்.

“ திணைபால் மரபு வினாச்செப் பிடஞ்சொல்
இணையா வழுத்தொகையோ டெச்சம் - அணையாக்
கவினையபார் வேற்றுமையும் காலமயக் குங்கொண்
டவினயனார் ஆராய்ந்தார் சொல்”

எனப் பதின்மூன்றாய் ஆய்ந்தார் அவிநயனார். இவற்றுள் தொல்காப்பியனார் ஆராய்ந்தன நீக்கி, மயக்கமும் சொல்லும் செப்பும் வினாவும் எச்சமும் மரபும் ஏற்றமாகச் சொன்னார்" என வரும் வீரசோழிய உரையால் இவர் சொல்லிலக்கணங் கூறியமை புலப்படும். (சொல் கிரியா.)

எழுத்தின் பிறப்பினை, “ஆற்றலுடையுயிர் முயற்சியின் அணுவியைந் தேற்றன ஒலியாய்த் தோன்றுதல் பிறப்பே என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க” என மயிலைநாதர் குறிப்பிடுவதால் எழுத்தாய்ந்த வகை விளங்கும்.

யாப்பருங்கலம், காரிகை ஆகியவற்றின் வழி எழுபதுக்கு மேற்பட்ட நூற்பாக்கள் அறிய வருகின்றன. பாட்டியல் தொடர்பான அவிநயர் நூற்பாக்கள் பதினைந்தனைக் காட்டுகின்றது பன்னிருபாட்டியல்

அவிநயவுரை

இனி இவ்வவிநயத்திற்கு இராசபவுத்திரப் பல்லவதரையன் என்பாரால் உரை காணப்பட்டிருந்த தென்பது, “இந்தப் பத்தெச்சமும், புவிபுகழ் புலமை அவிநய நூலுள், தண்டலங் கிழவன் தகைவரு நேமி, எண்டிசை புரக்கும் இராசபவுத்திரப் பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக”,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/228&oldid=1472524" இலிருந்து மீள்விக்கப்பட்டது