பக்கம்:இலக்கண வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

என்பது அப்பாயிரப்பகுதி. இதனைக் கூறும் யா. வி. உரையாசிரியர் பனம்பாரனார் கூறிய வாற்றானே எல்லை கொண்டார் காக்கை பாடினியார் என்கிறார். மேலும் ஒழிந்த காக்கைபாடினியத்து (சிறுகாக்கை பாடினியத்து),


“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென்திசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்”

எனத் தென்திசையும் கடலெல்லையாகக் கூறப்பட்ட தாகலான் அவர் குமரியாறுள்ள காலத்தர் அல்லர் என்பதூஉம், குறும்பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்று என்பதூஉம் பெற்றாம்" என்கிறார். இதனால் காக்கை பாடினியார் சிறு காக்கை பாடினியார் ஆகியோர்க்குள்ள முன்பின் கால இடைவெளி புலப்படும்.

சில வேறுபாடுகள்

ஆசிரியர் தொல்காப்பியனாரைப்போல் காக்கை பாடினியார் தளை என்பதோர் உறுப்பைக் கொண்டிலர்; சிறுகாக்கை பாடினியார் தளை என்பதை உறுப்பாகக் கொண்டார். தொல்காப்பியர் அசைகளை நான்காகக் கொள்ள இவர் ‘நேர்’ ‘நிரை’ ஆகிய ஈரசைகளையே கொள்கிறார்; நேர்பும் நிரைபும் கொண்டார் அல்லர். இவர் மதத்தையே பிற்காலத்தார் பலரும் மேற்கொண்டனர். ஆனால் காக்கை பாடினியார் நேர் நிரை என்பவற்றைத் தனி, இணை என்றார். இவ்வழக்கு ஏற்கப்படவில்லை. பாவினம் தொல்காப்பியத்தில் இடம் பெறாதது. அப்பாவினங்களைக் குறிப்பதுடன் தனித்தனி இலக்கணமும் கூறுகிறது காக்கை பாடினியம். ஆதலால் பாவினங்கள் பல்கி வளர்ந்த காலத்தில் தான் காக்கை பாடினியம் முதலிய தொல்காப்பியப் பிந்து நூல்கள் தோன்றியிருக்கவேண்டும்.

எழுந்தளவால் சீர் கணக்கிடல் தொல்காப்பிய மரபு. காக்கை பாடினியம் முதலியன சீர்வகை அடிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/233&oldid=1472851" இலிருந்து மீள்விக்கப்பட்டது