பக்கம்:இலக்கண வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


இவர், குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறுமென்பதைக் குறிக்கிறார். அரை நொடியின் இலக்கணத்தை,

“அரைநொடி யென்ப தியாதென மொழியின்
நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே”

என்பது நயமாக உள்ளது. இதன் வளர்ச்சியே, “உன்னல் காலே ஊன்றல் அரையே, முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”' என நூற்பா யாக்கத் தூண்டிய தெனலாம்.

தொடை வகைகளையெல்லாம் கூறிப், “பதின் மூவாயிரத் தறுநூறன்றியும் தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர்”' என்பது

“ மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டு தலைவிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே”

எனவரும் தொல்காப்பிய நூற்பாவை நினைவூட்டுகின்றது. தொடைகளைப் பற்றிய எண்ணிக்கைச் சிக்கலைத் தீர்த்தற்கு இஃது உதவுவதாக அமைதல் கூடும்.

‘சங்க யாப்புடையார்’ எனக் கூறப்பட்டதன்றி ஆசிரியர் பெயரையும் கூறாமையால் சங்கயாப்பு இயற்றிய ஆசிரியரைப் பற்றிய செய்தி எதுவும் அறிந்து கொள்ளக் கூடவில்லை.

சங்க யாப்பு நூற்பாக்களாக அறியப்பெறும் 24 நூற்பாக்களைத் தொகுத்துக் காட்டுகிறது மறைந்து போன தமிழ் நூல்கள்.

ஈ. சிறுகாக்கை பாடினியம்

காக்கை பாடினியார்க்குப் பின்னர் இருந்தவர் சிறு காக்கை பாடினியார். பேராசிரியர் இவரை (காக்கை பாடினியார்க்கு) “இளையரான சிறுகாக்கை பாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/236&oldid=1472855" இலிருந்து மீள்விக்கப்பட்டது