பக்கம்:இலக்கண வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

“செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை
அடியின் ஈட்டத் தழகுபட் டியலும்”

என்று இவர் கூறுவது, “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே” என்னும் தொல்காப்பியத்தை நினைவூட்டுவதாக உள்ளது (செய். 34).

தாண்டகம்

பன்னிரு பாட்டியலில் பல்காயனார் பெயரால் உள்ள நூற்பாக்கள் தாரகை மாலை, செந்தமிழ் மாலை, தாண்டகம் ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றன.

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்
கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே

எனக் குறுந்தாண்டக நெடுந்தாண்டக இலக்கணம் அமைக்கின்றது. இத்தாண்டகம் கூறும் பாட்டியல் இவருடையதெனின் காலப்பின்மைக்குத் தள்ளும். இல்லையேல் அப்பெயரினர் இயற்றிய பின்னூல் அஃதாதல் வேண்டும். ஏனெனில் இவர்தம் பழமை முற்காட்டப்பட்டதே.

எ. பன்னிருபடலம்

இப்பெயரிய நூல் தொல்காப்பியம், களவியல், யாப்பருங்கலவிருத்தி முதலிய உரைகளாலும் புறப்பொருள் வெண்பாமாலையாலும் தெரிகின்றது.

அளவினால் பெயர் பெற்றது பன்னிருபடலம் என்பது இறையனார் களவியல். “பன்னிருபடலம் முதல் நூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனார்” என்கிறார் பேராசிரியர் (தொல். மர.).


“தொல்காப் பியன்முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்”

என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/243&oldid=1473220" இலிருந்து மீள்விக்கப்பட்டது