பக்கம்:இலக்கண வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

உரையாசிரியர் பெயரை இப்பொருள் நினைவூட்டுகின்ற தென்க.

சமயம்

வெண்பாமாலையின் கடவுள் வாழ்த்து மூத்தபிள்ளையாரையும், சிவபெருமானையும் பற்றியிருத்தலால் இவர் சமயம் சிவசமயமாதல் வெளிப்படை. ஆயினும் பிற சமயங்களையும் உரிய சிறப்பால் இவர் போற்றுதல் நூலுள் வரும் சில துறைகளுக்கு இவர் படைத்துக் கூறும் வெண்பாக்களால் இனிது விளங்கும்.

“பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய் யாவை விழுமிய யாமுணரேம் — மேவார் மறத்தொடு மல்லர் மறக்கடந்த காளை நிறத்தொடு நேர்தரு தலான்”

என்பது இவர் பாடும் பூவைநிலை (192).

காலம்:

இளம்பூரணர், அடியார்க்கு நல்லார், பேராசிரியர், நச்சினார்க்கினியர், புறநானூற்று உரைகாரர், பரிமேலழகியார் ஆகியோரால் இந்நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. இளம்பூரணர் காலத்திற்கு இந்நூல் முற்பட்டது என அறிய வருதலால் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம்.

நூல்நிலை

இந்நூல் 'பன்னிரு படலம்' எனப்படும் நூலுக்கு வழி நூல் எனப் பாயிரத்தாலும் பேராசிரியர் உரையாலும் விளங்குகின்றது.


“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/249&oldid=1473281" இலிருந்து மீள்விக்கப்பட்டது