பக்கம்:இலக்கண வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

ஒன்று, ஆன்மா; இரண்டு, புண்ணியம் பாவம்; மூன்று, காமம் வெகுளி மயக்கம்: உற்சாக சக்தி பிரபுசக்தி மந்திர சக்தி; நான்கு, சாம தான பேத தண்டம்; ஐந்து, சத்தப் பரிச ரூப ரத கந்தம்; ஆறு, படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று மாம்" (225).

வெண்பா 65, 187 உரையும் காண்க.

உரைமுறை

இவர் பொழிப்புரை எழுதி, பாடல் தொடர்களை இவ்வாறு ‘கூட்டுக’ என்றும், 'என்க' என்றும் பெரும்பாலும் இயைபு காட்டுகிறார். “என்பது சூந்திரம்; எந்நுதலிற்றோ எனின்... நுதலிற்று” என நூற்பாக்களுக்கு நுதலுதல் உரைக்கிறார். ஏட்டு வழியிலோ வாய்மொழி வகையிலோ பிறிதுரைகளும் வழங்கப்பட்டன என்பது, ‘உரைப்பாரும் உளர்’, ‘பொருளுரைப்பாரும் உளர்’ என்னும் வாய்பாட்டில் இவர் எழுதுவதால் புலனாகும். இவரே ஈருரை எழுதுவதும் காணப்படுகின்றது (2).

பாடமும் உரை வேறுபாடும் காட்டுவதும் அரிதாகக் காணப்படுகின்றது. ‘குடக்கணீ கொண்டுவா வென்றான்’ என்பதை, “குடக்கணா கொண்டுவா வென்றான் என்று பாடமோதி மேற்பாற் தொழுவத்தில் பசுவை அடித்துக் கொண்டுவா வென்றான் என்று பொருளுரைப்பாரும் உளர்” என்கிறார் (4).

ஒரு சார் நெருக்க முடைய துறைகளும் அமைந்த வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவதை வழக்கமாகக் கொள்கிறார் (60, 63, 94, 97, 162, 210).

யாரை, யாவை என வினா எழுப்பிக்கொண்டும் விடையிறுக்கிறார் (1).

“வெட்சித் திணைப்பாட்டு இரண்டும் துறைப் பாட்டுப் பத்தொன்பதும் முடிந்தன” கரந்தைப் பாட்டு

இ. வ-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/254&oldid=1473288" இலிருந்து மீள்விக்கப்பட்டது