பக்கம்:இலக்கண வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217


துணியப்படும் என்றும் பதிப்பாசிரியர் பவானந்தர் குறித்தார் (1916), பெரும் பேராசிரியர் உ. வே. சா. நூல் நிலைய வெளியீட்டிலும் அப்பெயரே குறிக்கப்பட்டது. “அமிதசாகரர் என்று இருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால் இந்நூலின் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ அமுதசாகரர் என்றோ காணப்படுகின்றதே ஒழிய ஒன்றிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. கிடைத்த யாப்பருங்கலம் ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. வீரசோழிய உரையிலும் அமுதசாகரனார் என்றே எடுத்தாளப்படுகிறது” என்று நூலாசிரியர் பெயர் விளக்கப்பட்டுள்ளது. அமிதசாகரர் என்பதே இவர் பெயர் என்பதை அனவரத விநாயகர் ஆனந்தபோதினி இதழில் (12:1) 1919-ஆம் ஆண்டிலேயே எழுதினார். ந. மு. வேங்கடசாமியாரும் செந்தமிழில் எழுதியதுடன் கழகம் வெளியிட்ட காரிகைப் பதிப்பிலும் அமிதசாகரர் என்றே குறித்தார். நிற்க.

ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை (மாயூரத்தை) அடுத்துள்ள நீடூர் சிவன் கோயில் தெற்குத் திருமதிலில் உள்ள கல்வெட்டுப் பாடல்களில் ஒன்றில் அமுதசாகரர் என்றும், மற்றொன்றில் அமிதசாகரர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுகள் முதற்குலோத்துங்க சோழனின் 38-ஆம் ஆட்சியாண்டிலும், 46-ஆம் ஆட்சியாண்டிலும் எழுதப்பட்டவை. அவன் காலம் கி.பி. 1070-1120.

"தண்டமிழ் அமிதசாகர முனியைச்
      சயங்கொண்ட சோழ மண்டலத்துத்
தண்சிறு குன்ற நாட்டகத் திருத்திச்
      சந்தநூற் காரிகை அவனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/262&oldid=1473334" இலிருந்து மீள்விக்கப்பட்டது