பக்கம்:இலக்கண வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

மொழியும் அடைகளோ தொடை பலவாக, விரிதல் கண்கூடு. இதனை ‘மயேச்சுரர்’, என்னும் பகுதியில் சுட்டப்பட்டமை காண்க. இவ்வாறாக ஈருரையாசிரியர்களையும் ஓருரையாசிரியராய்க் கொள்ள வாய்க்கவில்லை.

யாப்பருங்கல விருத்திக்குப் பின்னர் எழுந்தது காரிகை உரை. அவ்வுரை விருத்தியைப் பதினோரிடங்களில் குறிக்கின்றது. அவ்விடங்களுள் ஒன்றிலேனும் யாம் உரைத்தாம் என்றோ, ஆண்டுக் கூறினாம் என்றோ வருமாறு இல்லை. ஆனால், சிந்தாமணிக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், தொல்காப்பியத்திற்கும் உரை கண்டவர் ஆதலின் சிந்தாமணியுள் யாம் கூறிய உரையான் உணர்க (தொல், செய். 210, 211) என்றும், செலவினும் வரவினும் என்னும் சூத்திரத்துக் கூறினாம் (சிந்தா. 72) ஆண்டுக் கூறிப்போந்தாம் (சிந்தா. 892) என்றும் கூறுவன கொண்டு தெளியலாம்.

கலிவெண்பாவின் இலக்கணம் ஈருரைகளிலும் மாறுபடுதல், எடுத்துக்காட்டுத் தரும் பாடல்களில் உள்ள வேறுபாடுகள் ஆயவற்றாலும் இவ்விரண்டுரைகளின் ஆசிரியரும் ஒருவரே எனக் கொள்ள இடந்தரவில்லை. இவ்வுரையாசிரியர் மயேச்சுரர் எனப்படும் பேராசிரியரின் மாணவராகவோ, அவர்தம் நெருக்க மிக்கவராகவோ இருந்த வேறொருவர் என்றும், குணசாகரர் என்பார் அல்லர் என்றும் உறுதிப்படுத்தலாம்.

உரையின் காலம்

நூல் தோன்றிய காலத்திற்கு அணித்தாகவே தோன்றியது விருத்தி. தண்டியலங்கார மேற்கோள்களில் அபயன், அநபாயன் எனப் பெயர் வழங்கிய முதற் குலோத்துங்கனைப் பற்றிய பாடல்கள் பல உள. அவன் பாடுபுகழால் பக்கமெல்லாம் பரவியவன். அவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/268&oldid=1473342" இலிருந்து மீள்விக்கப்பட்டது