பக்கம்:இலக்கண வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvi

வருணம் புகுந்துவிட்டது! இதனை ஆசிரியர், “எழுத்துக்கும் வருணம்! ஓலைக்கும் வருணம்! வருணக் கொடுமை கொடி கட்டிப் பறந்த சான்றுகள் இன்னவை!” (பக். 253) என்று சுட்டிக் காட்டுகின்றார்.

சிவஞான முனிவர் வாழ்ந்த காலத்தை, “கண்டனமும் மறுப்பும் கவித்து ஆடிய காலம்” என்கிறார் (பக். 377).

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் புறப்பொருள் பற்றிய இலக்கண இலக்கியங்கள் தோன்றாத காலச்சூழல் இருந்தது. அதனை ஆசிரியர் பின் வருமாறு சுட்டிக் காட்டுகின்றார்.

“பிற்காலங்களில் புலவர்களின் நிலை ஒடுங்கியது. அரண்மனையுள்ளும் அரசவையுள்ளும் இருந்து களிப்பூட்டும் பாடல்களை – குறிப்பாக அகத்துறைப் பாடல்களைப் பாடுபவராக அமைந்தனர். அதனால் புறப் பொருள் இலக்கணமும் இலக்கியமும் பெருகுதலின்றி நின்றன” (பக். 407).

இவையே அன்றி ஆசிரியர் கீழே கூறுகின்ற கருத்தும் காலச்சூழல் பற்றிய ஆய்வில் தோன்றியதாகும். “யாப்பியல் நூல் பெருக்கக் காலம் ஒன்றிருந்தமை யாப்பருங்கல விருத்தியால் அறியப்படுவதுபோல, பாட்டியற் பெருக்கக் காலம் ஒன்று இருந்ததைப் பன்னிரு பாட்டியல் காட்டுகிறது” (பக். 331).

14. சேர்க்க வேண்டிய செய்திகள்

இந்த நூலில் சேர்க்க வேண்டிய செய்திகள் சில

1. “கூழங்கைத் தம்பிரான் நன்னூலுக்கு இயற்றிய உரை வெளிவந்திலது” என்று இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக். 301). ஆனால், ஏழு ஆண்டு களுக்கு முன்னரே அந்த உரை நூல் வெளிவந்துள்ளது.

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், 1962-ஆம் ஆண்டில் தொடங்கிய தெற்காசியக் கழகத்தில் 1980இல் கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக் கழகத்தில், தமிழ்த்துறையில் பணியாற்றி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/27&oldid=1480823" இலிருந்து மீள்விக்கப்பட்டது