பக்கம்:இலக்கண வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

227


கூறிய இலக்கணச் செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய சில பல வெண்பாக்களைக் காட்டி இவற்றை விரித்துரைத்துக் கொள்க என அமைகின்றார். இத்தகைய செல்விய நெறியில் செல்வது விருத்தியுரை.

உவமை

‘எழுத்தசை’ என்னும் முதல் நூற்பாவில் “இவ்வேழு உறுப்பினும் தீர்ந்து யாப்பு உண்டோ எனின் இல்லை: என்போலவெனின், முப்பத்திரண்டு உறுப்பொடும் புணர்ந்தது மக்கட் சட்டகம் என்றால் முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட் சட்டகம் இல்லை அதுபோல எனக்கொள்க” என்று உவமையால் விளக்குகின்றார்.

வெண்பா முன்னாகவும் ஆசிரியம் பின்னாகவும் வருவது மருட்பா. அதனை, “கங்கை யமுனைகளது சங்கமம் போலவும், சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப்புற்று மருட்சி யுடைத்தாகப் பாவி நடந்தலின் மருட்பா என்று வழங்கப்படும்” என்கிறார்.

வண்ணங்களையெல்லாம் எண்ணற்ற உவமைகளால் சுட்டுகிறார். அவற்றுள் தூங்கிசை வண்ணம்:

“முதுபிடி நடந்தாற்போலவும் கோம்பி நடந்தாற்போலவும் நாரை நடந்தாற்போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக்கொள்க.”

அரிய விளக்கங்கள்

" ‘எனப்படும்’ என்பதற்கு, ‘என்று சிறப்பித்துச் சொல்லப்படும்’ எனப் பொருள் கூறி, ‘என’ என்னும் அது சிறப்பினைக் கூறுமோ? எனின் கூறும். என்னை?

‘நளியிரு முந்நீர் ஏணியாக’என்னும் புறப்பாட்டினுள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/272&oldid=1473770" இலிருந்து மீள்விக்கப்பட்டது