பக்கம்:இலக்கண வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


“முரசு முழங்கு தானை மூவிருள்ளும்
அரசனெப் படுவது நினதே பெரும”

எனவும்,

“ஆடு மழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே அத்தை”

எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும்,

‘நாடெனப் படுவது சோழ நாடு’'
‘ஊரெனப் படுவது உறையூர்’'

என்று பரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக் கொள்க" என்று இருவகை வழக்குகளையும் காட்டி விளக்குகிறார். இவ்வாறே நேர் (பக்.233), இசை (234), ஒத்தாழிசை (292,297), கொச்சகம் (292), சுரிதகம் (297), அம்போதரங்கம் (294) முதலாய பல சொற்களை ஆய்ந்து அரிய விளக்கங்களைத் தருகின்றார்.

பதிப்பு

யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு சரவணபவானந்தரால் 1916, 1917ஆம் ஆண்டுகளில் முதற்பாகம் இரண்டாம் பாகமென வெளியிடப்பட்டது. சென்னை அரசுச் சார்பில் பெரும்புலவர் மே.வீ. வேணுகோபாலரால் 1960-இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. சைவ சித்தாத்த நூற்பதிப்புக் கழக வழியாக என்னால் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு 1973-இல் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/273&oldid=1473772" இலிருந்து மீள்விக்கப்பட்டது