பக்கம்:இலக்கண வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. யாப்பருங்கலக் காரிகை


“யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக்காரிகை என்னும் பெயர்த்து” எனக் குணசாகரர் வரைவது (1) இந்நூற் பெயர்ப் பொருளை விளக்கும்.

பெயர்

காரிகை என்பது ‘பெண்’ என்னும் பொருள் தருதல் உண்டு. அவ்வகையில் மகடூஉ முன்னிலை உடைய நூலாதலின் இப்பெயர் பெற்ற தென்றும், காரிகை என்பது இலக்கணம் இயங்கும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் குறிப்பதாகலின் அப்பாவகையான் அமைந்த நூல் இப்பெயர் பெற்றதென்றும் கொள்ளவும் இடமுள்ளது.

ஆசிரியர்

காரிகையை இயற்றிய ஆசிரியர் அமிதசாகரர் என்பவர் என்பதும், அவர் முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றிப் பின்னர் இக்காரிகையை இயற்றினார் என்பதும், இந்நூலுக்கு யாப்பருங்கலப் புறநடை என்பதொரு பெயர் என்பதும் பிறவும் யாப்பருங்கலப் பகுதியில் காணப்பட்டவையே. ஆசிரியர் வரலாறும் பிறவும் ஆங்குக் கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/274&oldid=1473774" இலிருந்து மீள்விக்கப்பட்டது