பக்கம்:இலக்கண வரலாறு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


என்றும், அவ்வாறு நூலை இயற்றி நூலுக்கு அமைவான மேற்கோளமைதி நூற்பாக்களுள் சில அமைத்து வருங்கால் முற்று முடிக்கு முன் இயற்கை எய்தினார் என்றும் நூலமைதியால் கொள்ள வாய்க்கின்றது.

‘உருவுகண்டு’, ‘வைகல்துகடீர்’, ‘நற்கொற்வாயில்’, ‘கொண்டல் முழங்கின’,‘நேரிசையாகும்’,‘கன்றுகுணில்’, ‘வானெடுங்கண்’, ‘நின்று விளங்கு’, ‘குடநிலைத்தண்’, ‘நொய்தினையாய்’, ‘மடப்பிடி பேடை’, ‘தென்றலிடையும்’ என்னும் காரிகைகள் ‘உரைச்சூத்திரக் காரிகை’ எனப்படுதல் அறிக. மற்றையவை, ‘என்பது காரிகை’ (1). ‘இத்தலைக்காரிகை என்னுதலிற்றோ எனின்’ (1) இக்காரிகை (2) என்னும் முறையில் வருதல் அறிக. ஆசிரியர் எழுதாது விடுத்த எடுத்துக்காட்டுப் பற்றிய காரிகைகளை உரையாசிரியரே நிறைவித்து உரையமைத்தார் ஆகலின், 'உரைச்சூத்திரக்காரிகை' என வேறுபாடு காட்டினார் என்று அறிந்து கொள்ளலாம்.

ஓராசிரியர் இயற்றிய நூல்களே எனினும் சில வேறுபாடுகள் உண்மை காணலாம்.

யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை

நூற்பாவான் அமைந்தது. கட்டளைக் கலித்துறையான் அமைந்தது.


அவையடக்கம் இல்லை. அவையடக்கம் உண்டு(2, 3).


ஆசிரியர் பெயரும் ஆசிரி இவை கூறப்படவில்லை.

யர்க்கு - ஆசிரியர் பெயரும்

பாயிரத்தில் கூறப்பட்டுள.


அசைக்கு உறுப்பு 15 என்னும் (2) அசைக்கு உறுப்பு 13 என்னும் (4).

இயலின் உட்பிரிவாக ஓத்து இல்லை.

என்னும் சிறுபிரிவு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/276&oldid=1473777" இலிருந்து மீள்விக்கப்பட்டது