பக்கம்:இலக்கண வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxvii


தமிழறிஞர் அ. தாமோதரன் அவர்கள் பின்வரும் செய்தியைக் கூறியுள்ளார்கள்:

“தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் மறைந்து விட்டதென உறுதியாக நம்பப்பட்டு வந்த கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் காண்டிகையுரையைக் கண்டு பிடித்து, காலந் தாழ்த்தாது (1980இல்) தமிழுலகிற்கு வழங்கியதை ஒரு பெருமையாகவே தெற்காசியக் கழகம் கருதுகிறது”

வெளிவந்துள்ள கூழங்கைத் தம்பிரானின் நன்னூல் உரை பற்றிய செய்திகள், இந்த நூலின் இரண்டாம் பதிப்பில் இடம் பெறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

2. சில இலக்கண நூல்கள், ஆசிரியரின் நினைவுக்கு வராமல் போய்விட்டன! மு. அருணாசலம் பதிப்பித்த ‘பிரபந்த மரபியல்’, டாக்டர் சுந்தரமூர்த்தி பதிப்பித்த ‘உவமான சங்கிரகங்கள் மூன்று’, திருக்கோயில் இதழில் தொடர்ச்சியாய் வெளிவந்து பின்னர் நூலாக வடிவம் பெற்ற ‘வண்ணத்தியல்பு’, செந்தமிழ் இதழில் (14-ஆம் தொகுதியில்) வெளிவந்த ‘இலக்கண தீபம்’ முதலிய இலக்கண நூல்கள் இலக்கண வரலாற்றில் இடம் பெற வேண்டும்.

15. நிகண்டுகள், இலக்கண நூல்களே!

தமிழில் காலந்தோறும் நிகண்டு நூல்கள் பல தோன்றியுள்ளன. அவை யாவும் இலக்கண வகையைச் சேர்ந்த நூல்களே ஆகும். அவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் வகையும் இலக்கண வரலாற்றில் இடம் பெறுதல் வேண்டும்.

பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் பிற காலத்தில் தனி நூல்களாக வளர்ச்சி பெற்றன. பொரு


●ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்–மதுரை–1981; (பக். 218); கட்டுரை—‘மேற்கு ஜெர்மனியில்— தமிழ்’; அ. தாமோதரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/28&oldid=1480824" இலிருந்து மீள்விக்கப்பட்டது