பக்கம்:இலக்கண வரலாறு.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

இக் காரிகை நிரை நிறைப் பொருள்கோள் வகையான் நேரசையும் நிரையசையும் ஆமாறும் அவற்றுக்கு உதாரணம் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று (5) என்றும், இக்காரிகை பொதுச்சீருக்கு உதாரணம் ஆமாறும் அவற்றது எண்ணும் பொதுச்சீரும் அசைச்சீரும் செய்யுளகத்து வந்தால் தளை வழங்கும் முறைமையும் உணர்த்துதல் நுதலிற்று" (8) என்றும் வருவன காண்க.

காரிகைக்கு உரை வகுக்குங்கால் ஒரு மொத்தமாக உரை கூறாமல், பொருள் நின்ற வகையாற் பகுத்துப் பகுதி பகுதியாகப் பாடலடியைப் பிரித்துக் காட்டி உரை வரைந்து ‘என்றவாறு’ என்கிறார். விதப்புக் கிளவி விளக்குதல் எடுத்துக்காட்டுத் தருதல் ஆகியவற்றை அவ்வவ் விடங்களிலேயே நிறைவிக்கிறார்.

எடுத்துக்காட்டைக் கூறுவதுடன் அதனுள் அவ்விலக்கணம் அமைந்துள்ள வகையை எடுத்துக்காட்டுதலையும் மேற்கொள்கிறார்.

பிறர் கொள்கைகள் என வருமிடங்களில் தனியாய்வு வகையை மேற்கொண்டு நூலாசிரியர் கொள்கை இன்னதென வரையறுக்கிறார்; சான்றாக ஒன்று:

“இனி ஒரு சாரார், வெண்பாவினுள் அளவெழுந்தால் நாவசைப் பொதுச்சீர் வருமென்பார் உளராயினும், அவ்வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும் பொழுது செப்பலோசை பிழைக்கும் என்பதூஉம், ஆண்டுச் சீரும் தளையும் சிதையவாராமையின் அளபெடுப்பனவும் அல்ல அளபெடுப்பினும் அளபெடைகள் அலகு காரியம் பெறுவனவும் அல்ல என்பதூஉம் காக்கை பாடினியார் முதலிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு” என்கிறார் (8),

சிறப்பு

யாப்பிலக்கணம் கற்பார்க்குத் தலையான நூலாகத் நிகழ்வது இக்காரிகையே என்பது தமிழ் உலகம் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/282&oldid=1473814" இலிருந்து மீள்விக்கப்பட்டது