பக்கம்:இலக்கண வரலாறு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238


அறிந்தது. “காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை தட்டிப் பிழைப்பதுமேல்” எனவரும் வழக்கும், “காடும் செடியும் என்னோ தமிழ்க் காரிகை கற்கின்றதே” என்னும் படிக்காசுப் புலவர் தனிப்பாடலும் காரிகைப் பெருமையை நன்கு விளக்கும். காரிகைச் சிறப்பாலே அமித சாகரர்க்குக் கொடையாக வழங்கப்பட்டதென அறியவரும் ‘காரிகைக் குளத்தூர்’ கலத்துக்கு இல்லாத பெருமையைக் காரிகைக்குத் தருவதாக அமைந்துள்ளதும் எண்ணத்தக்கது.

காரிகையின் காலத்துக்குப் பின்னே அதன் வழி நூல்களாக வந்தனவும், அதனையே இலக்கணமாகக் கொண்டு இலக்கியம் படைத்த நூல்களும், அதன் விளக்க நூல்களாக உரைநடையில் வெளிப்பட்ட நூல்களும் பலப்பலவாம். புத்துரை கண்டதும் வினா விடை அமைப்புக் கொண்டதுமாகிய நூல்களும் உண்டு.

பதிப்பு

யாப்பருங்கலக் காரிகை குணசாகரர் உரையுடன் 1851ஆம் ஆண்டு களத்தூர் வேதகிரி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. 1864-இல் நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரால் ஐந்திலக்கண மூலப்பதிப்பில் காரிகையும் பதிப்பிக்கப்பட்டது. 1870-இல் கொட்டையூர் சி. சாமிநாத தேசிகர் யாப்பிலக்கணச் எழுதிய சுருக்கம் வெளிவந்தது. 1888-இல் முத்துத்தம்பிப் பிள்ளை யாப்பிலக்கண சூசனம் வெளிப்படுத்தினார். 1898-இல் யாப்பிலக்கணச் சுருக்கம் திருச்சி முத்தி சிதம்பரம்பிள்ளையால் வெளியிடப்பட்டது. யாப்பிலக்கண வினா விடை அமிர்தம்பிள்ளை என்பார் கொணர்ந்தார் (1845—99). யாப்பிலக்கண வினா விடை விசாகப்பெருமாளையராலும் கொண்டு வரப்பட்டது. சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் யாப்பருங்கலக் காரிகைக்குப் புத்துரை எழுதினார் (1899). சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், அண்ணாமலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/283&oldid=1473815" இலிருந்து மீள்விக்கப்பட்டது