பக்கம்:இலக்கண வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வீரசோழியம்


வீரராசேந்திர சோழன் என்பானுக்கு ஒருபெயர் வீரசோழன் என்பது. அவன் பெயரால் ‘பொன்பற்றி’ யூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர் என்பார் இயற்றிய நூல் வீர சோழியம் ஆகும். இஃது ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல். ஐந்திலக்கணம் என்னும் அமைப்பில் வெளிவந்த முதல் நூல் இவ்வீரசோழியமே.

காலம்

வீரசோழன் பெயர் விளங்க இந்நூல் இயற்றப்பட்டது என்பது,

“தேமே வியதொங்கல் தேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமேல் உரைப்பன்”

என்றும் (பாயிரம். 3),

“செம்பியன் வீரரா சேந்திரன்தன் நாவியல் செந்தமிழ்

என்றும் (நூல். 7) வருவனவற்றால் அறியலாம். இவ்வேந்தன் காலம் 11 ஆம் நூற்றாண்டு ஆதலால் அக்காலமே புத்தமித்திரனார் காலமுமாம் என்க.

இஃது ஐந்து அதிகாரமுடைமையும் தமிழொடு வடமொழி மரபும் கூறுவது என்பதும்,

“நாமே எழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும்
பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப்பைச் சுருக்கி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/285&oldid=1473821" இலிருந்து மீள்விக்கப்பட்டது