பக்கம்:இலக்கண வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

“புகட்சி பரவல் குறிப்புக் கொடிநிலை கந்தழி
இகட்சி மலிவள்ளி யென்றிவை ஆறும் நெறிமுறையில்
திகட்சி மலைதரு பாடாண் பகுதி செப் பாதனவும்
இகட்சியுண்டாகா வகைதேர்ந் தறிதல் இயல்
புடைத்தே”

என எதுகைக்கு இவற்றைப் பயன்படுத்துகின்றது அறிக. இவ்வழியே உரைகாரரும் செந்தமிழ்ச்சொல் என்பதைச் 'செந்தமிட் சொல்' (1, 8) என்றும் புகழ்ச்சி என்பதைப் 'புகட்சி' (86) என்றும் இன்னவாறு உரையில் பயன்படுத்துகிறார்.

“மூன்றொடு நான்கு ஒன்பதாம் உயிர்” (13)

“ஆறாம் உடலின் பின்” (14)

“எண்ணிரண்டாம் ஒற்று” (16)

இவ்வாறு எழுத்துகளை எண்ணிக்கை வகையால் குறித்தலைப் பெரு நடைமுறையாகக் கொண்டுள்ளார்.

எழுவாய் உருபு

'எழுவாய் வேற்றுமை திரியில் பெயரே' என்பது தமிழ் வழக்கு. அதற்கும் இவர் உருபு தருகின்றார். உருபுகளுள் ஒன்று ‘சு’ என்றும், ‘அது எங்கும் வாராது’ என்றும் கூறுகிறார். இது வடமொழி வழிப்பட்டது என்பதை, “வடமொழியுடையான் வாரி என்றும் சொல்லை வைத்து முதல் வேற்றுமை ஏகவசனத்தைப் பொருள் விளக்குதற் பொருட்டு எவ்வண்ணம் இட்டழித் தான், இவனும் அதுபோல ஆக்கி அழித்தாலல்லது பதமாகாதென்று இட்டழித்தான் என்க” என உரையாசிரியர் விளக்குகின்றார் (33). தமிழ் வேற்றுமைகளைச் சொல்லும் ஆசிரியர் வடமொழிக் காரகத்தையும் தொடுத்துக் கொண்டே செல்கிறார். தமிழ் மொழியை வடமொழி உணர்வோடு பார்ப்பதே இவர் பார்வையாய் அமைதல் எங்கும் பளிச்சிடுகின்றது. இலக்கியம் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/289&oldid=1473881" இலிருந்து மீள்விக்கப்பட்டது