பக்கம்:இலக்கண வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

ஆகிய மூன்று தன்மைகளும், நீரில், ஒலி ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு தன்மைகளும், நிலத்தில், ஒலி ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்து தன்மைகளும் இருத்தலைக் கொண்டு குறளடி முதலியவற்றுக்குக் குறிப்பு வகையால் இப்பெயராட்சி செய்தார் என்க. இப்பெயராட்சிக்கு, முதல்வரும், முடிவரும் இவரே என்பதே தமிழ் நூற்பரப்புச் சான்று!

மோனை எதுகைத் தொடைகளைக் கூறும் இவர் எதுகை, முரண், இயைபுத் தொடைகளை விடுத்தார். அந்தாதி, இரட்டை, செந்தொடை ஆகியனவும் விடுத்தார்; பொழிப்பு, இணை முதலானவற்றையும் விடுத்தார்.

அலங்காரப் படலத் தொடக்கத்தில் (141) “அலங்காரங்கள் தண்டி சொன்ன, கரைமலி நூலின்படியே உரைப்பன்” என்கிறார். பின்னும் தண்டிகளைப் பேசுகிறார் (147). விதர்ப்ப நெறி, கவுட நெறி ஆகியவற்றைக் கூறி விளக்குகிறார் (146—149).

௧) தண்டியாசிரியர் வடசொல்லால் கூறும் அணிகளை, இவர் தமிழாக்கிக் கூறுகிறார்:

தண்டி

வீரசோழியம்

அதிசயம்

பெருக்கு

தீவகம்

விளக்கு

சமாயிதம்

துணைப்பேறு

விசேடம்

சிறப்பு

விரோதம்

முரண்

நிதரிசனம்

சுட்டு

சங்கீரணம்

விராவு

பரிவருத்தனை

பரிமாற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/291&oldid=1471562" இலிருந்து மீள்விக்கப்பட்டது