பக்கம்:இலக்கண வரலாறு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

சிலையாரும் இவ்வாறு வேற்றுமைக்குக் கூறுதல் ஆங்குக் காண்க.

சொற்பழுதாகாமல் பாடலியற்ற வேண்டும் என்பதைத் தடைவிடைகளால் இவர் கூறுமாறு :

“அவைகள் (சொற் பழுதுகள்) அன்றுள்ளானொரு குரிசிலைப் புகழ்ந்து செய்யும் கவியுள் மறந்தேயும் வரப் பெறா எனக் கொள்க. ஆகாமைக்குக் காரணம் யாதெனின், ‘தச்ச நூலில் இப்படிப்பட்ட மனைதனை எடுக்கிற் குடிபுகல் இன்ன நன்மை தரும்’, ‘இன்ன தீமை தரும்’ என்று சொல்லும் என்பது. மற்றும் ‘இப்படிப்பட்ட யானை குதிரை ஆயுதம் உடையானுக்குப் பொல்லாங்கைத் தரும்’, ‘நன்மையைத் தரும்’ என்று நூலுண்மையான் என்பது. ஆகின், பகைவராய் உள்ளாரைச் சாவவும் கெடவும் பாடல் ஆகாதோ எனின், அற்றன்று. பாடின கவி பாட்டுண்டான் கொள்ளின் அல்லது பயன் கொடாது என்பது என் போலவோ எனின், குதிரை இலக்கணம் அறிவான் குதிரை கொள்ளுமிடத்து இக்குதிரை கொள்ளில் எனக்குப் பொல்லாதென்னும் இலக்கணம் அறியான் பயன் கொள்ளான். பாட்டுண்பானும் இலக்கணம் தான் அறிதலின்றேல் பிறரையிட்டாராய்தல் செய்து கைக்கொள்ளும். அறியாதும் ஆராயாதும் கொள்ளின் பயன் கொடா தென்பது. அற்றன்று; ஆராயாது கைக்கொண்டாருஞ் சாவவும் கெடவும் பழையோர் பாடினாரெனின், அது பாட்டின் பலனால் வந்ததன்று; அவர்கள் சொற் பழுதாகாமையில் எனக் கொள்க” என்பது (143).

அகலக் கவி செய்வான் வழக்குச் சொல் அல்லாதவற்றையும் நூலில் கூற நேரும் என்கிறார்: “குண்டலகேசியும் உதயணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/294&oldid=1473249" இலிருந்து மீள்விக்கப்பட்டது