பக்கம்:இலக்கண வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


நாம் கண்டம், நாங்கள் கண்டம், நாமறிசம், நாங்களறிசம் (80) உண்டியது. உண்கிறியது, உறங்குகிறியது, உண்கிறிது, உறங்குகிறிது, உண்பிது, உறங்குவிது (81) என்று இவர் எடுத்துக்காட்டுக் காட்டுவதும், கோடாலி (40, 41, 43) போல வழுச்சொல் வழங்குவதும் திகைப்பூட்டுகின்றன. வட்டா (வட்டை) முருங்கா (முருங்கை) என்பவை ஆரியச் சொல்லும் சிங்களச் சொல்லுமாகக் காட்டலும் அத்தகைத்தே (59).

கவிழப்பூக்கும் தும்பை கவிழ்தும்பை (51), பூனைக் காலை ஒப்பக் காய்ப்பது பூனைக்காலி (54), தறிக்கப்படுதலால் தறி, முறிக்கப்படுதலால் முறி, பொதியப்படுதலால் பொதி (62) எனப் பொருணிலை விளக்கம் கண்டு இலக்கணம் கூறுதல் மகிழ வைக்கின்றது.

சிறுக்கன், தடுக்கு, மெத்தை, வாய்ச்சி ஆகிய {41) வழக்குச் சொல் வளங்களை ஆங்காங்குக் காட்டுகிறார்.

நடை

நடையாவது ஒழுக்கம் எனக் கொண்டு குறிஞ்சி நடையியல், நெய்தல் நடையியல், பாலை நடையியல், மருத நடையியல், முல்லை நடையியல் என நெடிய அகவல்களில் துறைகளை விரிய எடுத்துக் கூறுகிறார். குறிஞ்சி நடையியல் 74 அடிகளால் விரிகின்றது. அதில் கூறப்பட்டுள்ள துறைகள் மட்டும் 106 உள்ளன. இவ்வாறே பிற திணைகளின் நடையியலும் கூறப்பட்டுள்ளன. இக்கூறல் கோவை நூல்களுக்கு வகுத்துக் காட்டிய வனப்பாக அமைகின்றது எனலாம்.

ஓசை

இவர், ஓசை யூட்டுமாற்றை விளக்கிக் காட்டுவது புது வகையினது.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/296&oldid=1473856" இலிருந்து மீள்விக்கப்பட்டது