பக்கம்:இலக்கண வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. வெண்பாப் பாட்டியல்

வெண்பா யாப்பால் அமைந்த பாட்டியல் ஆதலின் இப்பெயர் பெற்றது. இதனை இயற்றிய ஆசிரியர் நேமிநாதத்தை இயற்றிய குணவீர பண்டிதரே ஆவர். இவர்தம் ஆசிரியர் வச்சணந்தி என்பார். அவர் பெயரைக் கொண்டு ‘வச்சணந்தி மாலை’ என்னும் பெயராலும் வழங்குகிறது.

“வளங்கெழு மாடத்துக் களந்தையெம் பெருமான்
வளர்ந்த கீர்த்தி வச்சணந்தி தேவன்
என்னும் மாமுனி செய்வித் ததனால்
வச்சணந்தி மாலை என்னும் பெயர்த்து”

என்னும் பாயிர உரையால் இதனுண்மை விளங்கும். செய்வித்தானால் பெற்ற பெயர் இப்பெயர் என்க. குணவீரபண்டிதர் வரலாற்றை நேமிநாதத்தில் கண்டு கொள்க.

வழி

இதன் பாயிர உரையால் இந்நூல் இந்திர காளி என்னும் பாட்டியன் மரபின் வழிவந்ததென்றும், தொகுத்தமைக்கப்பட்ட நூலென்றும், திருமலைப் பண்டிதர் என்பார் இந்நூலைக் கேட்டு ஆய்ந்தவர் என்றும், திரிபுவன தேவன் காலத்ததென்றும் அறியவருகின்றன. இந்நூல் கேட்கப்பட்டது ‘கடவுண்முதலிய நற்சங்கத்தார் அவைக்களத்து’ என்பது ‘திருமலைப் பங்கய மலர்த்தாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/309&oldid=1474232" இலிருந்து மீள்விக்கப்பட்டது