பக்கம்:இலக்கண வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

266

“என்களங்கம் யாவையும் நீக்கி இனிதருளி
நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை
மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன்
தன்பெயரான் நாட்டுத் தமிழ்”

என்பது அவையடக்கம்.

‘நாடாளும் வேந்தரும் நல்லடியில் வீழ்ந்து வணங்கப்படும் வச்சணந்தி முனிவன் திருநோக்குப்பட்ட இடத்துத் திருமல்கும்; பகையும் பிணியும் நீங்கும்; அறம் அகலாது’ என்னும் பொருளமைந்த வாழ்த்து வெண்பா ஒன்றும் நூலில் உள்ளது. அது முதலியல் இறுதியில் இடம் பெற்றுள்ளது. அஃது ஈற்றில் இருந்திருக்கக் கூடும்.

உரை

வெண்பாப் பாட்டியலுக்குப் பொழிப்புரையும் குறிப்புரையுமாக அமைந்த ஓருரை உண்டு. அவ்வுரையாசிரியர் பெயர் தெரிந்திலது. பாயிரத்தின் முதற்பாடல் விரிவுரையுடையதாய்ப் பாயிரச் செய்திகளையெல்லாம் தன்னிடத்துடையதாய் அமைத்துள்ளது. ‘மாலை மாற் றாதியா’ என்னும் சித்திரக்கவித் தொடர்க்கு மாலை மாற்று முதல் முப்பத்திரண்டு வகைச் சித்திரக் கவிகளைக் குறிக்கிறார் (செய். 4). அகலக் கவி நூல் பெயர் பெறுமாற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். பாண்டிக்கோவை பாடுவித்தானைப் பற்றி வந்தது என்றும் வச்சணந்தி மாலையும் அற்று என்றும் கூறுகிறார் (செய், 45). வாதிக்கு ஆகாதவை விதண்டா வாதம், சர்ப்பவாதம் என்கிறார் (46). விளக்கவுரை வரைந்த கொ. இராமலிங்கத் தம்பிரான் “காதல் மிரண்டுள்ளதன்கண் வெல்லும் வேட்கையுடையான் கதை சர்ப்பமாம். தன் கோட்பாட்டை நிலைநிறுத்தாத கதை விதண்டையாம்” என்கிறார். ‘விதண்டாவாதம், சந்தர்ப்ப வாதம்’ என இந்நாள் வழக்கிலும் உள்ளவற்றை நோக்கச் சர்ப்பவாதம் என்பது ‘சந்தர்ப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/311&oldid=1474234" இலிருந்து மீள்விக்கப்பட்டது