பக்கம்:இலக்கண வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. தண்டியலங்காரம்

அணியிலக்கணம் கூறும் நூல்களுள் முதன்மையும் சிறப்பும் வாய்ந்தது தண்டியலங்காரமாகும். தண்டி என்னும் புலவரால் இயற்றப்பட்ட அணி நூலானமையால் தண்டியலங்காரம் எனப்பட்டது.

தண்டி

வடமொழியில் ‘காவ்யதர்சம்’ என்னும் நூலை இயற்றியவர் பெயரும் தண்டி என்றே சொல்லப்படுவார். அதனால் அத்தண்டியாரும் இவரும் ஒருவரே என்றும் கூறுவர். ஆனால் வடமொழித் தண்டியாசிரியர் கி. பி. ஏழாம் நூற்றாண்டினர் என்றும், தழிழ்த் தண்டியாசிரியர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்றும் அறியப்படுதலால் இருவரும் வேறானவர் என்பது விளங்கும். பெயரொற்றுமையே இம்மயக்கத்திற்குக் காரணம் என்க. தண்டியாசிரியரின் நூலை மொழி பெயர்த்து, ‘தண்டி’ எனப்பெயரிட்டமை கொண்டு, அவரைத் தண்டியாசிரியர் எனக் கூறினர் என்றும், அவர் இயற்பெயர் மறைந்ததென்றும் கொள்ளுதல் முறையாம். தண்டி என்னும் பெயர் தமிழகமும் கண்டதே என்பதை நாயன்மார் வரிசையில் அறியலாம்.

கம்பரின் மைந்தர் அம்பிகாபதியார் என்பது வரலாறு. அவர் தம் மகனார் தண்டியார் என்பது தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/314&oldid=1474238" இலிருந்து மீள்விக்கப்பட்டது