பக்கம்:இலக்கண வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273



காப்பியம்
இவர் கூறும் பெருங்காப்பிய இலக்கணத்தைத் தனித்தனி பகுத்துக் கொண்டு அப்பகுப்புக்குரியவற்றைச் சிலப்பதிகாரத்திலிருந்து தொகுத்துக் கண்டால், அதனைக் கொண்டே காப்பிய இலக்கணம் இயற்றினாரோ என்று எண்ணத் தூண்டும். “காவிரி நாடன்ன கழனி நாடு” என்று கண்ட கம்பன் காட்சியே இத்தண்டி காட்சியாய் அமைந்து தமிழணியாகத் திகழலாயிற்று என்னும் எண்ணத்தை எழுப்புதல் ஒருதலை. எனினும், மொழி பெயர்ப்பு நூலாயிற்றே. அதனால், விபாவனை, இலேசம், பரியாயம், சமாயிதம், உதாத்தம், அவநுதி, சிலேடை, விசேடம், விரோதம், நிதரிசனம், பருவருத்தனை, சங்கீரணம் என அணிப்பெயர்களை ஆட்சி செய்துளார். இவர் எண்ணத்தில் தமிழாக்க வித்துத் தோன்றியிருந்தால் கட்டாயம் செய்திருப்பார் என்பது மட்டும் வெளிப்படை.
காரணர்
இதன் விளைவு என்ன ஆயிற்று? “தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்த வண்ணமே ‘யுக்தமும் அயுக்தமும்’ ‘ராசமாபுரி’ ‘ரவிகுல திலகன்’ என முறையே கூறுதல் காண்க. நாலடியாரும் தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியில் பிறந்த வண்ணம் முறையே ‘யோசனை கேட்பார்’, ‘யுக்தமும் அயுக்தமும்’, ‘ரவிகுல திலகன்’ எனத் தற்சமமாகக் கூறினாற்போல யாமும் ‘உருவபேதம்’ என்னாமலே ‘ரூபபேதம்’ என்றாம்” என்று பிரயோக விவேக நூலார் தம் கருத்துக்கு இவரைக் காரணராக்கிக் கொண்டமை காண்க.
நூற்புறனடையாகக் கூறும் இறுதி நூற்பாவில் (126) நூலில் கூறியன எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகிறார். அதற்குரிய உரைப் பகுதியில் “இந்நூல்

இ. வ-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/318&oldid=1474242" இலிருந்து மீள்விக்கப்பட்டது