பக்கம்:இலக்கண வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxi

பாட்டியல் நூல்களும் ஆகியவை பற்றி விளக்குதல் வருங்கால ஆய்வுக்குத் துணை செய்யும்.

தமிழ் இலக்கணத்தின் மீது, வடமொழியின் செல்வாக்குப் பரவியதால் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

இத்தகைய செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றிருந்தால், நூல் இன்னும் சிறந்து விளங்கி இருக்கும்!

‘மடாதிபதி’ என்னும் தொடரை இந்த நூலாசிரியர், ‘திருமடத்தலைவர்’ என்று வழங்கியுள்ளார், (பக். 379 - 380).

மடம்+ தலைவர் என்பது ‘மடத்தலைவர்’ என்று புணருமாயினும், பொருட் சிறப்புக் கருதி

‘மடம்+அத்து+ தலைவர்’

என்று அத்துச்சாரியை சேர்த்து,

‘மடத்துத் தலைவர்’

என்று வழங்குவது சிறப்பாக இருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/32&oldid=1480829" இலிருந்து மீள்விக்கப்பட்டது