பக்கம்:இலக்கண வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

செம்பூர் வீ. ஆறுமுகம் சேர்வை பதிப்பு, கா. ர. கோவிந்தராச முதலியார் துணையுடன் வந்தது. 1938இல் கொ. இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரையுடன் கழகப் பதிப்பும், 1962 இல் சி. செகந்நாதாசாரியார் பதிப்பும், 1967இல் கு. சுந்தரமூர்த்தியார் விளக்கவுரைப் பதிப்பும் வந்தன. நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் மூலப்பதிப்பொன்றும் 1864இல் வெளிவந்தது. அஃது ஐந்திலக்கண மூலமுமுடையது. 1924இல் கழக வழி ஐந்திலக்கண மூலப் பதிப்பு வந்துளது. அணியியல் விளக்கம் என்றொரு நூல் திருத்தணிகை சரவணப் பெருமாளையரால் வெளியிடப்பட்டமை அறிய வருகின்றது (1875).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/322&oldid=1474247" இலிருந்து மீள்விக்கப்பட்டது