பக்கம்:இலக்கண வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

17. நன்னூல்


ஆசிரியர் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட இலக்கண நூல் ‘நன்னூல்’ ஆகும். ‘நூல்’ என்றாலே இலக்கண நூலையே குறித்தல் பழவழக்கு. நூலுக்குரிய பா நூற்பா எனப்படுகின்றது. ‘நூலினான’ எனத் தொல்காப்பியர் நூற்பா யாப்பினைக் குறிப்பார்.

நூல்

நூல் என்னும் பெயருடன் ஒருநூல் இருந்தமை இறையனார் களவியலுரை, சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரை நன்னூல் மயிலை நாதருரை ஆகியவற்றால் விளங்குகின்றது. “நூலே நுவல்வோன் நுவலும் திறனே, கொள்வோன் கோடற் கூற்றாம் ஐந்தும், எல்லா நூற்கும் இவை பொதுப் பாயிரம்” என நன்னூல் (3) சுட்டும் தொகை வகை விரிகள் இலக்கணம் சார்ந்தனவே என்பதைக் கற்றார் அனைவரும் அறிவர். இச்செய்திகள் முதற்கட்டுரையில் விரிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

நன்னூல், ‘நல்ல இலக்கணம்’ என்னும் பொருளது. நன்னூலில் வரும் “முதனூல் கருத்தன்” என்னும் நூற்பாவுரையில் “தன்மையால் பெயர் பெற்றன: சிந்தாமணி நன்னூல் முதலாயின” என்றனர் (49) உரையாசிரியர்கள்.

நன்னூற் பாயிரத்தில் “அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்” தருமாறு சீயகங்கன் வேண்டியபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/323&oldid=1467192" இலிருந்து மீள்விக்கப்பட்டது