பக்கம்:இலக்கண வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தங்கலர் குலமாம் வெங்கயமனுங்கும் சிங்கமாகிய கங்கனென்பான்

அரிய நூல்களை ஆராய்தலே தனக்கு இன்பமாக வுடையான் பெரும் போரினையே புனைகலனாக வுடையான் என்னும் அழகமை பெயரினை யுடையான்” என்பது அது.

நூலுக்கு உரை தானா? நூலைப் பெருக்கிக் காட்டி நுண் கலை வளங்களெல்லாம் கூட்டிக் காட்டும் கலை மாளிகையா? கங்கனோ, கங்கன் வழியினரோ மயிலை நாதர் உள்ளமும் உயிரும் தளிர்ப்புற உதவுநராக இருந்தமை இச்சான்றால் மட்டுமன்று; பின்னும்,

“கங்கன் அகன்மார்பன் கற்றோர்க் கினிதளிக்கும்
செங்கனக வெள்ளைச் செழுமணிகள்—எங்கும்
தெறித்தனவே போல்விளங்கு மீன்சூழ்ந்த திங்கள்
எறிக்குநிலா அன்றோ இனி”
(267)

என வருவதும் பிறவும் காட்டும். இவர் காலம் கங்கன் காலமே என்பர். கங்கன் காலம் நன்னூலார் காலமுமாதலால் நூலாசிரியரும் உரையாசிரியரும் ஒரே காலத்தவர் என்றாகும்.

மயிலைநாதர் உரையை அரிதின் முயன்று அருமையாகப் பதிப்பித்த உ. வே. சா. அவர்கள், “சூத்திரங்களுள் பொருள் விளங்குவனவற்றிற்குச் சுருக்கமாகவும் ஏனையவற்றிற்கு விரிவாகவும் சிலவற்றிற்கு வினாவிடையாகவும், சிலவற்றிற்கு மோனை எதுகை முதலிய தொடை நயம்படவும் ஒவ்வொன்றைப் பிரித்துப் பிரித்துத் தனித்தனியாகவும் பலவற்றைத் தொகுத்து அவற்றின் இறுதியில் பிண்டமாகவும் பொருளெழுதிச் செல்லுதல் இவர்க்கு இயல்பு” என்கிறார் (உரையாசிரியர் வரலாறு).

அடைநயம்

நூலாசிரியர்களாம் புலவர்களையும், உரையாசிரியர்களையும் இவர் எதுகை மோனைத் தொடைநயம் படப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/333&oldid=1474260" இலிருந்து மீள்விக்கப்பட்டது