பக்கம்:இலக்கண வரலாறு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

உரைவிரித்தெழுதிற்றிலம்; இவற்றை விரித்துரைத்துக் கொள்க" என்கிறார். இதனால் வேண்டுமிடத்து விளக்கம் தருதலே தம் உரைநோக்கு என்பதும் வாளா விரித்தலை விரும்பினார் அல்லர் என்பதும் அறியவரும்.

விரிவு

வேண்டுமிடத்து விரித்துக் கூறுதலை மேற்கொண்டார் என்பதற்கு ஒரு சான்று. அகர முதலாக நெடுங்கணக்கு அமைவதன் அடிக்களத்தை ஆய்ந்து கூறுகிறார் (72).

"அகரம் தானே நடந்தும் நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒருமுதலாயும், அறம் பொருள் இன்பமென்னும் முப்பொருளின் முதற்பொருட்கும், அருள் அன்பு அணி ஆழகு முதலாயின தற்பொருட்கும் முதலாக வருதலானும் அகரம் முன்வைக்கப்பட்டது" என்கிறார்.

சகரம் மொழி முதலாதல் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் பாடவேறுபாடு காட்டி உண்டென்பது உண்டு . இவர்,

"சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி-சவிசரடு, சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை"

என்னும் வெண்பாவைக் காட்டி சம்முதலாக வருதலை நிறுவுகிறார். அக்காலத் தில்லன இக்காலத்து வழங்குமென இதனை நூல் இறுதியிலும் எடுத்துக் காட்டுகிறார் (461).

சொல்லதிகாரத் தொடக்கத்தில் 'முச்சக நிழற்றும்' என்னும் வாழ்த்தும், வருபொருளும் அமைந்த நூற்பா உரையில் அதிகாரம் தோறும் இறைவணக்கம் வேண்டத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/335&oldid=1470240" இலிருந்து மீள்விக்கப்பட்டது