பக்கம்:இலக்கண வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293


“செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே”

(134)

என்றும் நன்னூல் நூற்பாவுக்கு இவர் கூறும் ஆசிரிய விருத்த உரை வருமாறு:

செம்மையும் கருமையும் பசுமையும் வெண்மையும்
திண்மையும் நுண்மையு முடனே
சிறுமையும் பெருமையும் குறுமையும் நெடுமையும்
தீமையும் தூய்மை யுமலால்
வெம்மையும் குளிர்மையும் கொடுமையும் கடுமையும்
மேன்மையும் கீழ்மை யும்பின்
மெய்மையும் வறுமையும் பொய்மையும் வன்மையும்
மென்மையும் நன்மை யும்சொல்
ஐம்மையும் பழமையும் புதுமையும் இனிமையும்
அணிமையும் நிலைமை யும்சேர்
ஆண்மையும் மும்மையும் ஒருமையும் பன்மையும்
அருமையும் இருமையும் மிக்க
கைம்மையும் கூர்மையும் கேண்மையும் சேண்மையும்
கடியவள மையுமி ளமையும்
காணரிய முதுமையும் பண்புப்ப காப்பதம்
காட்டுமின் அனைய மாதே!

நன்னூலார் பதினொரு பண்புகளைக் கூற இவர் ‘இவற்றெதிர் இன்னவும்’ என்பதைக் கொண்டு நாற்பத்து மூன்று பண்புகளைக் கூறுகிறார். ‘மின் அனைய மாதே’ என மகடூஉ முன்னிலை வைத்துப் பாடுகின்றார். இம்மேற்கோள், தமிழ் வரலாற்றில் ச. பூபாலபிள்ளை காட்டுவது என்பர். (இலக்கண வரலாறு பக். 143).


ஆசிரிய நிகண்டில் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு ஆகியவற்றை இவர் குறிப்பிடுவதால் இக் கயாதர நிகண்டின் காலத்திற்கு (கி. பி. 1450) இவர் பிற்பட்டவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/338&oldid=1474271" இலிருந்து மீள்விக்கப்பட்டது